Monday, December 12, 2011

இப்படி ஒரு மத்திய அரசு தேவையா?


    முல்லை பெரியாறு பிரச்சனை தமிழகத்திலும் கேரளத்திலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, ஆனால் இப்பிரச்சனையில் தலையிட்டு நடுநிலை செய்துவைக்கவேண்டிய மத்திய அரசோ, இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனை போல ஒன்றுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே தலையிடுகிறது, ஆனால் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதே இல்லை. இந்த பிரச்சனையை மாநிலங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றால் மத்திய அரசாங்கம் எதற்கு நமக்கு?

Tuesday, May 31, 2011

எண்டோசல்ஃபான் எனும் எம தூதன் !


'கல்யாணத்துக்கு வரச் சொன்னா...
கருமாதிக்கு வந்து சேர்ந்திருக்கான் பாரு’ என கிராமத்தில் சொல்வார்கள். இந்தச் சொலவடை அரசு இயந்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டணிக்கு, காலகாலமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்திக் கொண்டிருப்பதுதான் மக்களின் சாபக்கேடு!
''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்
போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.
அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?


ஆளையே காவு வாங்கிவிடும்!
'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.
இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.
பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.


அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா?
பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.
கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,

 
''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!


நாசமாகும் நரம்பு மண்டலம்!
தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.
இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.
எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.


உண்ணாவிரதம் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு!
'இந்தியா முழுவதும் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும்'' என்று ஏற்கெனவே வலியுறுத்தி வரும் கேரள முதல்வர் அச்சுதானந்தன், சமீபத்தில் அதிரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார... எண்டோசல்ஃபானுக்கு எதிரானப் போராட்டம்... அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. எலியும், பூனையுமாக இருந்த பாரதிய ஜனதா உட்பட அரசியல் கட்சிகளும், நடிகர்களும்கூட அக்கறையோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
''காசர்கோடு மாவட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டது போதாதா? அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால்தான் தடை செய்வோம் என மத்திய அரசு சொல்வது முறையா? விவசாயத் துறை மந்திரி சரத் பவார் மக்களைப் பற்றி சிந்திக்காமல், எண்டோசல்ஃபான் கம்பெனிக்கு வக்காலத்து வாங்குகிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றவாளி எனத் தெரிந்திருந்தும், ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய அரசுதானே இது... வேறு எப்படி இருக்கும்?'' என்று உண்ணாவிரதத்தில் குரல் எழுப்பிய அச்சுதானந்தன்,
''எண்டோசல்ஃபானுக்கு, தடைவிதிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்போகிறேன்' என்றும் தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.
அச்சுதானந்தன் உண்ணாவிரதமிருந்த அதேநாளில், கேரள சர்வக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இந்திய அளவில் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது அதில், 'எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இது பற்றிய அறிக்கை கேட்டிருக்கிறோம். இந்த அறிக்கை கிடைத்ததும், இறுதி முடிவு அறிவிக்கப்படும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உண்ணாவிரதம் மாநிலம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளத் தொலைக்காட்சிகளில் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், பாதிப்பு காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஓரணியில் திரட்டியப் பெருமை எண்டோசல்ஃபானுக்கு கிடைத்துள்ளது.

எண்டோசல்ஃபானும்... காசர்கோடும்!
 கேரள மாநிலத்தின், காசர்கோடு பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட, அந்தப் பகுதியே நோயாளிகளின் பூமியாகிவிட்டது. உடல் ஊனமுற்றவர்களாக, புற்றுநோயாளிகளாக, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களாக மொத்தத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள் மக்கள். அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, மக்கள் போராட ஆரம்பித்த பிறகு, விபரீதத்தை உணர்ந்த மாநில அரசு, உடனடியாக எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்தது . காசர்கோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளிலும் எண்டோசல்ஃபானின் பாதிப்பு எதிரொலிக்க, கர்நாடக மாநிலமும் தடை விதித்துள்ளது.

கோடிகளில் நடக்கும் வியாபாரம்!
 உலக அளவில் எண்டோசல்ஃபான் தயாரிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிலில் 3,800 முதல் 4,100 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் இத்துறையில் கால் பதித்திருந்தாலும், 'எக்செல் இன்டஸ்ட்டிரீஸ்', 'ஹிந்துஸ்தான் இன்செக்டிசைஸ்', ஈ.ஜ.டி. பாரி ஆகியவையே அதிகளவில் தயாரிக்கின்றன.

விதவிதமானப் பெயர்கள்!
 'எண்டோசல்ஃபான்’, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி. பழுப்பு மற்றும் கிரீம் நிறங்களில் சிறியத் தூளாகவும், படிகமாகவும் டர்பன்டைன் வாசத்துடனும் இருக்கும். குளோரின் ஏற்றப்பட்ட ஹைட்ரோ-கார்பன்தான் எண்டோசல்ஃபான் என அழைக்கப்படுகிறது. இதில் குளோரின் ஏற்றம் செய்யக் காரணியாக பயன்படுவது... தயோனில் குளோரைடு. இது, கந்தகத்தை பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளதால் நச்சுத் தன்மையுடையதாக இருக்கிறது.
எண்டோசைட் (Endosite), தியோடன் (Thiodan), ஹில்டன் (Hildan), எண்டோசெல் (Endocel),, எண்டாசிட் (Entacid), எண்டோசிட் (Endocid), ஹைசல்பான் (Hysulphan),, பாரிசல்ஃபான் (parrysulfan) ஆகிய பெயர்களில் எண்டோசல்ஃபான் சந்தைப்படுத்தப்படுகிறது.இது, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கும் பூச்சிக்கொல்லி வகையைச் சேர்ந்ததாகும்.
தானியங்கள், காபி, பருத்தி, பழப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களில் நோய் உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கவும், மரத் துண்டுகளைப் பூச்சிகள் அரித்திடாமல் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றம் கேள்வி!
மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு 'எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், 'எண்டோசல்ஃபானைத் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கெஞ்சிய இந்தியா... மிஞ்சிய உலக நாடுகள்!
'உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயற்கை (ரசாயன) மாசு ஒழிப்பு' பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள ரசாயனப் பாதிப்புகளைப் பற்றி விவாதிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மாநாடு ஏப்ரல் 25 முதல் 29 தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் இருந்து, பார்வையாளராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, ''மக்கள் நலனில் அக்கறையுள்ள பல நாடுகள் ஏற்கெனவே எண்டோசல்ஃபானைத் தடைசெய்து விட்டன. தற்போது நடைபெற்ற மாநாட்டில்கூட ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், தங்கள் பகுதிகளில் தடை விதிக்கத் தயார் என அறிவித்தன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 'நாங்கள் ஏற்கெனவே தடை விதித்துவிட்டோம். என்றாலும், காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த மருந்தின் வீரியம், அது பயன்படுத்தப்படாத நாடுகளிலும்கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உலகம் முழுவதும் தடை செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்' என வலியுறுத்தினர்.
பெரும்பாலான நாடுகளின் கருத்தும் இதுதான். இதை முன்கூட்டியே கணித்துவிட்ட இந்திய அரசின் பிரதிநிதிகள், 'ஓட்டெடுப்பு மூலமாக தடை ஏற்படுத்தி விடுவார்களோ' என அஞ்சி... ஆசிய மற்றும் பசிபிக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினர். 'எண்டோசல்ஃபான் உடனடியாக தடை செய்யப்பட்டால், பல விவசாயிகள் நஷ்டமடைவார்கள். இதனால் சமூக, பொருளாதாரத் தாக்கம் ஏற்படும். அதனால் தடைக் காலத்தை 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தள்ளிப்போடலாம்' என அதில் கெஞ்சிக் கூத்தாடியிருந்தனர். இதற்கெல்லாம் காரணம்... மக்கள் மீதான அபிமானமல்ல. பூச்சிக்கொல்லி தயாரிக்கும் கம்பெனிகள் மீதான அபிமானமே!
ஆனால், பெரும்பான்மையான நாடுகள் தடையை ஆதரிக்கவே, இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தடைக்கு எதிராக இதுவரை முழங்கி வந்த இந்தியப் பிரதிநிதிகள், வேறு வழியில்லாமல், 'ஐந்தாண்டுகள் வரையாவது அனுமதி தாருங்கள்’ எனக் கெஞ்ச ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்தியா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுக்கு எண்டோசல்ஃபானைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார் ஜெயக்குமார்




இந்நிலையில், கடந்த 13-ம் தேதியன்று, எண்டோசல்ஃபான் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இந்தியா முழுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அத்தோடு, இந்த விஷயத்தில் இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக இருந்து வரும் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர், 'இந்திய ஜனநாயக வாலிபர் சங்க'த்தின் தேசிய இணைச் செயலாளர் டி.வி. ராஜேஷ். கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்ணனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தீர்ப்பு பற்றி அவரிடம் பேசியபோது,


மக்களுக்குக் கிடைத்த வெற்றி!
'இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. உண்மையைச் சொன்னால், நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட, இடைக்காலத் தடை செய்தி மிகமிக சந்தோஷப்பட வைத்துவிட்டது.
எண்டோசல்ஃபான் கொடூரத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும், உள்ள  மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காசர்கோடு இன்று கேரள மாநிலத்தின் வறுமைக் கோடாகவே காட்சி தருகிறது. ஆனால், இந்திய அரசு மட்டும் எண்டோசல்ஃபானுக்கு வக்காலத்து வாங்கி வருகிறது. நிரந்தரத் தடை விதிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவும் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும்' என்றார், உறுதியானக் குரலில்!
இந்நிலையில், எண்டோசல்ஃபான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு காரணமாக ஏற்படும் பாதிப்பு பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிக் கிளம்பி, அதிர வைத்தபடி இருக்கின்றன.


உண்மைகள் மறைக்கப்படுகின்றன!
இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட தி.மு.க செயலாளர் மோகன்தாஸ், ''இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்களில் தினந்தோறும் பத்தாயிரம் லிட்டருக்கும் மேல் எண்டோசல்ஃபான் தெளிக்கப்படுகிறது.
தொடர்ந்து அளவுக்கு அதிகமாக தெளிப்பதால், தொழிலாளர்களுக்கு தோல் நோய், நுரையீரல் புற்றுநோய், இதய பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தும் உள்ளனர். பெண்களுக்கு மகப்பேறு, மாதவிடாய் தொடர்பானப் பிரச்னைகள் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகமே மருத்துவ வசதி செய்து கொடுப்பதால், வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகிறது.


இளைப்பு நோயால் இறக்கும் தொழிலாளர்கள்!
கடந்த மாதம் நாரையாறு தேயிலை எஸ்டேட்டைச் சேர்ந்த தொழிலாளி ராஜனுக்கு இளைப்பு நோய் ஏற்பட்டு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சோதித்த டாக்டர்கள், 'ரத்தத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருக்கிறது, அத்துடன் நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் காப்பாற்ற முடியாது’ என கை விரித்து விட்டனர். கடைசியில் அவர் இறந்தே விட்டார். நூற்றுக்கணக்கனவர்கள் இதே முறையில் இறந்து வருகிறார்கள். இளைப்பு நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி விடுவதால், சில மாதங்களில் இறந்து விடுகிறார்கள். இவர்களது இறப்புக்கான காரணத்தை யாரும் பதிவு செய்வதில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இருந்த இடுக்கி மாவட்டத்தில், தற்போது பதிமூன்றாயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். எண்டோசல்ஃபான் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர்கள் இடுக்கி, வயநாடு, கொச்சி மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்தான். இவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தமிழர்கள்'' என்றார், வேதனையுடன்.


தமிழகமும் தப்பவில்லை!
திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியில் மருந்தடிக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருந்தடிக்கும் வேலை செய்ததால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் இளநீர் வியாபாரம், சைக்கிள் கடை என தொழில்களையே மாற்றிக் கொண்டு விட்டனர்.
நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த காந்தன், 'பல வருசமா மருந்தடிக்கிற வேலைதான் பாத்துட்டு இருந்தேன். ஆறு வருசத்துக்கு முன்ன நரம்பு தளர்ச்சி வந்தப்புறம் மருந்தடிக்கப் போறது இல்ல. காட்டம் அதிகமா இருக்கறதால எண்டோசல்ஃபானைதான் அதிகமா அடிப்பேன். அப்பப்ப பென்வால், மோனோகுரோட்டபாஸ் அடிப்பேன். கொஞ்ச நாளா அடிக்கடி உடம்பு சுகமில்லாம போனவுடனே டாக்டர போய் பாத்தப்போ, செக் பண்ணி பாத்துட்டு, 'என்ன வேலை பாக்குற’னு கேட்டாரு. மருந்தடிக்கிற வேலைனு சொன்னேன்.
'சீக்குக்கு அதுதான் காரணம், இனிமே மருந்தடிக்கப் போகக்கூடாது’னு சொல்லவும் ஆடிப் போயிட்டேன். 'உழைக்கிறதே உசுரு வாழத்தானே!'னு  அதிலிருந்து இன்னிய வரைக்கும் ஸ்பிரேயர கையால தொடவே இல்ல. இப்பவும் என்னால கஷ்டமான எந்த வேலையையும் பாக்கமுடியல... வேகமா நடக்கவும் முடியல' என்றார் சோகத்துடன்.


எண்டோசல்ஃபானை எதிர்க்கும் பூச்சிகள்!
அதே ஊரைச் சேர்ந்த ஜோசப், ''ஆரம்பத்துல ஒண்ணும் தெரியல. நாளாக, நாளாக கண் எரிச்சல் வந்துச்சு, நாலு வருசத்துக்கு முன்ன விரல்ல இருக்குற நகமெல்லாம் தன்னால பிச்சுகிட்டு விழுந்துடுச்சு, ஏகப்பட்ட காசு செலவு பண்ணித்தான் சரி செஞ்சேன். இப்பவும் திடீர் திடீர்னு காய்ச்சல் வருது. ஆஸ்பத்திரியில, 'இனிமே மருந்தடிக்கற வேலைக்குப் போக கூடாது'னு சொல்லிட்டாங்க, ஆனா, எனக்கு இதை விட்டா வேற தொழில் தெரியாதுங்க, அதனால, வேற வழியில்லாம இன்னமும் மருந்தடிக்குற வேலைதான் பாத்துகிட்டிருக்கேன்'' என்று சோகத்துடன் சொன்னவர் கூடுதல் தகவலாக
''இங்க அவரைதான் அதிகமா விதைப்பாங்க. இந்த எண்டோசல்ஃபான் மருந்தை அடிச்சப்ப ஆரம்பத்துல அவரையில இருந்த புழுங்க  செத்துகிட்டுருந்துச்சு. இப்ப பெரிய, பெரிய புழுவா கிளம்பி வருதுங்க. மருந்தடிச்சாலும் சாகமாட்டேங்கிது. அதனால, காய் பறிக்கறப்ப, அந்தப் புழுவையெல்லாம் பிடிச்சு எரிச்சுதான் கொல்றாங்க!''
தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்ட இப்பூச்சிக்கொல்லியை, இந்தியாவில் நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றன. மத்திய அரசும் இதுதொடர்பான பரிசீலனையைத் துவக்கியிருக்கிறது.
நிரந்தரத் தடைக்காக நீதிமன்றம்... போராட்டம் என்பவை தவிர்க்க இயலாமல் செய்யப்படுகின்றன. மனித நலனுக்கு எதிரான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, செலவு குறைவான இயற்கை வழி விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்... தன்னாலே வந்து விடுமே தடை!.



ஆண்டுக்கு 25 கோடி!

    எண்டோசல்ஃபான் பற்றி தமிழக வேளாண்மை துறையினரின் விளக்கம் என்ன..? மதுரை மண்டல மருந்தியல் துறை ஆய்வக அலுவலர் ரமேஷ், ''பயிர்களைத் தாக்கும் வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க எண்டோசல்ஃபான் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் ஐந்து முதல் பத்து மில்லி வரை கலக்கிறார்கள். இந்தக் கரைசல் மண்ணில் விழும்போது எளிதாகக் கரையாது. இலைகளில் படும் கரைசல், ஒரு வாரம் வரை தங்கி இருக்கும். தொடர்ந்து தெளிக்கும்போது இலைகளில் படிமமாகத் தங்கி விடும்.
இது, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லி. இதை தெளித்த இலைகளைச் சாப்பிட்டாலோ அல்லது தொடர்ந்து இதை தெளிக்கும் வேலையைச் செய்தாலோ இதில் உள்ள 'அசிட்டைல் கோலின்’ (acetylcholine)என்ற ரசாயனம்... நரம்புக் கட்டுகள், எலும்பு மஜ்ஜைகளில் தங்கி விடும். இதனால் நரம்பு தொடர்பான நோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, நுரையீரல் புற்றுநோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது'' என்றவர்,
''தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு எண்டோசல்ஃபானைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பருத்திக்கு மட்டுமே இது அதிகம் பயன்படுத்தப்படுவதால்... இங்கு பாதிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்'' என்றார்.

 முந்திக் கொண்ட தேனி!
 உச்ச நீதிமன்ற தடையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில், கடந்த 16-ம் தேதி முதல் எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி:- பசுமை விகடன்

Monday, May 30, 2011

பாப்பா பாடல்கள் - 10

அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டுப் பழம் கொண்டு வா!

பாதிப் பழம் உன்னிடம்!
மீதிப் பழம் என்னிடம்!
கூடிக் கூடி இருவரும்!
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!!

பாப்பா பாடல்கள் - 9

ஒன்று யாருக்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து

பாப்பா பாடல்கள் - 8

தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணணுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
திரும்பக் கேட்டால் பூசை!

பாப்பா பாடல்கள் - 7

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்

பாப்பா பாடல்கள் - 6

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை அடைந்தான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டுப் படுத்தான்

பாப்பா பாடல்கள் - 5

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு

பாப்பா பாடல்கள் - 3

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

பாப்பா பாடல்கள் - 2

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சாதம் போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யார்தான் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

பாப்பா பாடல்கள் - 1

பத்து காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன் பைய பைய ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பந்துபோல ஆனது
பந்து போல ஆனதும் பலமாய் இன்னும் ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பானை போல ஆனது
பானை போல ஆனதை பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தால் பார்க்கலாம் இல்லை
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்...


பாப்பா பாடல்கள் - 4

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக் குட்டி

அம்மா என்குது
வெள்ளைப் பசு - உடனே
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி

நாவால் நக்குது
வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி


Tuesday, May 24, 2011

புதிர்-5 : தண்ணீர் தொட்டி

எங்கள்  வீட்டில் ஒரு தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதில் பொருத்தியுள்ள குழாய் கொஞ்சம் விசித்திரமானது. மோட்டரை போட்டவுடன் முதல் நிமிடம் கொஞ்சம் தண்ணீர் வரும். இரண்டாவது நிமிடம் அதைப்போல இரண்டு மடங்கு தண்ணீர் வரும். மூன்றாவது நிமிடம் நான்கு மடங்கு தண்ணீர் வரும்.
நான்காவது நிமிடம் எட்டு மடங்கு தண்ணீர் வரும். இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தண்ணீரின் அளவு இரட்டித்து கொண்டே போகும். தொட்டி முழுவதும் தண்ணீர் நிரம்ப ஒரு மணி நேரம் ஆகும். அப்படியானால் பாதித்தொட்டி எப்போது நிரம்பும்?.

Thursday, April 14, 2011

திருமணம்



எனக்கென்று ஒரு வனம்


அதைசுற்றியே என் மனம்


அங்கே என்ராணியின் மணம்


இதை உறுதிபடுத்த ஒரு இனம்


அதுதான் என் திருமணம்

Wednesday, April 13, 2011

தாத்தா - பேரன்

"தன் கிளையில் தன் வண்ணத்தையும்
          வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
          பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
                  அப்பா மகன் - உறவு,
 தன் காலடியில் தன் விழுதும்
          தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
        அமைதியின் பெருநிலையே
                தாத்தா - பேரன் உறவு"

Sunday, April 10, 2011

அரிசி - சுஜாதா சிறுகதை

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்ட வசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.'தேமேனு' சென்று கொண்டிருநத என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து 'ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு' என்று சொன்னார்.
என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ்டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்"அப்படியா? மாத்திட்டாப் போச்சு" என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார்.அங்கிருந்து பேசினார் "கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"

"அது எங்க கிடைக்கும்?" "ஜே,ஸி, ரோடு போகணும்" சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க" "அதெப்படிஙக முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே" "முளுக்கப் பாருங்களேன்"

அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நுறு அதற்கு ஐம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து.போக்கு வரத்து கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்ததேன்.

ஒரு கிழவன் சௌ¢ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் 'லொடக்கா லொடக்கா'என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு 'மெட்டடார்' வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல் ,பார்க்காமல்,நிறுத்தாமல், முட்டாள்தன மாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என் வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.

பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால் அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.

கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.

"டிரைவர் எங்கய்யா?" "அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு" "நான் இல்லிங்க டிரைவர்" "ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் துக்குங்க" "தூக்காதிங்க! போலிஸ் வரட்டும்" "அந்த ஆட்டோவை நிறுத்துய்யா" நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸின் ஜன்னல் பூரா முகங்கள்!"பிரசன்னா சீக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸின் உள் ஒரு அழைப்புக் கேட்டது.

"போலிஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது" "டெலிபோன் செய்யுங்களேன்" "ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்" "எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலிஸ் வந்துருவாங்க" இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள் வெடித்தன.

"ஆள் யாருஙக" "யாருக்குத் தெரியும்" "கூட ஒருத்தரும் வரலியா" "நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க" என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக் கொண்டிருந்தார்கள் "டெலிபோன் செய்யணும்" "எழுபத்தஞ்சு பைசா" "தர்றேன்" "முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது" "இல்லை . போலிசுக்கு போன் செய்யணும். ஒரு ஆக்ஸிடெண்ட்" "பண்ணிக்கங்க" "டைரக்டரி வேணும்.அவசர போலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?" "தெரியாது" "டைரக்டரி இல்லையா?" "இல்லை!" "அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்" "ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-" "என்ன?" "இதில மட்டும் மாட்டிக்காதிங்க" "எதில?"

"ஆக்ஸிடெண்ட் கேஸில நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆகஸிடெண்ட் கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு ஆஸபத்திரிக்குப் போனேன்.'அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போ'ன்னாங்க.விக்டோரியா எவ்வளவு துரம்?- அங்கே போனேன் ."அங்க போனா 'போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய மட்டும கொண்டு வரலாம்'னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க

முதல்லயே என்மேல ஏறினாங்க'எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்' டெட் ஆன் அரைவல்'னு முடிச்சுடடு கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க."கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸபெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு "அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் என்ககு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்ததேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துககு நானே காரணம்ஙகற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என் பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு"

"நான் பிரமிப்புடன்கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "யாராவது போலிசுக்கு போன் செய்ய வேண்டாமா" என்றேன்

"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்" "நம்பர் தெரியலையே" "நுறு பண்ணுங்க" நான் போலிஸ¨க்கு டெலிபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன் ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான் சென்றதும் "இவர்தாங்க " என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி "போலிசுக்கு சொல்லிட்டேன்" என்றேன் "போலிஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலிஸ் ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு" போலிஸ் இன்ஸபெக்டர என்னைப் பார்தது "கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன். "நீங்க இந்த ஆக்ஸிடெண்ட்டை பார்த்திங்களா?" " ம்.. பார்த்தேன்" "உங்க பேரு?" அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன ."எதுக்கு?" " எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?" "அது வந்து … பார்ததேன் துரத்தில இருந்து சரியாப் பார்க்கலை" "இப்பதான் பார்ததேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க" "அட்ரஸ் வந்து.. நான் ஊருக்குப் புதுசுங்க" "ஊருக்குப் புதுசா? பங்களுர்ல தங்கறவர்தானே?" "அதாவது மெட்றாஸ்காரன் நான்" " சரி. இங்க வேலை செய்யறவரா?" " இல்லை.. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவன்ல திரும்பிடறேன்" அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை.என்னை வருத்தத்துடன் பார்த்துச் சிரித்தார் "ஏன் ஸார் சாட்சி சொல்றதுக்கு அவ்வளவு பயமா?" "பயம்னு இல்லிங்க. வந்து நான் ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்" "அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்" "யாராவது பாத்தவங்க சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாராவது?

கூட்டம் மெல்லக் கலைந்தது நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக"ப்ளீஸ் லுக் இன்ஸபெக்டர் ! தி ஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வரமுடியும் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.சந்தோஷமா வருவேன். ஆனா வெளியூர்க்காரன்.. அதனால மெட்றாஸ்ல இருந்தா எப்படி.." இன்ஸபெக்டர் கோபததுடன் "போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே ! போ" என்றார்.கிழவனின் அருகில் சென்றார் அவன் இது நேரத்தில் இறந்திருந்தான் நான் சற்று க்ஷநெரம் நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம்"மெட்றாஸ்ல இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும் சொல்லுஙக" "அதானே! ஆவுறதில்லை அது" என்று அனுதாபித்தார் திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன் அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார் "கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா" என்றார் "செய்யுங்க" "இன்ஜினை டவுன் பண்ணணும் மூணு நாளாகும்" "செய்யுங்க. எஸ்டிமேட் கொடுத்துடுங்க" "மொத்தம் முன்னுத்தம்பது, எல்லாத்துககும் பில் கொடுத்துர்றேன்" "சரி" "உங்க அட்ரஸ் சொல்லுங்க" சொன்னேன் "எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க" "ஒம்பது வருஷமா" "புதன் கிழமை வந்துருங்க" "சரி" என்று வெளியே வந்தேன் இப்போது அந்த காவி வர்ண வேனைக் காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர். போலிஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது கிழவன் கிடந்த இடத்தில் அடையாளமாக உறைந்த ரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறக்குறைய கிழவனின் வயசிருக்கும் போல் புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி வைத்திருந்தான் போலும். அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது இரண்டு சிறுவர்கள் ரத்தம் படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

Thursday, April 7, 2011

புதிர் 4 - முக்கோணங்களின் எண்ணிக்கை



பகுதி எண் வெள்ளை முக்கோணங்கள் கருப்பு முக்கோணங்கள்
1 1 3
2 3 6
3 6 10
4 ____ 15
5 15 ____
1. பகுதி நான்கு மற்றும் ஐந்தினை நிரப்புங்கள்.

2. பகுதி ஐம்பதில் எத்தனை வெள்ளை முக்கோணங்கள் இருக்கும்?

புதிர் 3 - எவ்வளவு பணம் இழப்பு?


    சைக்கிள் கடை வைத்திருக்கும் என்னுடைய நண்பர் முத்துவின் கடைக்கு ஒருநாள் ஒரு வெளிநாட்டு பயணி சைக்கிள் வாங்க வந்தார். முத்து அவரிடம் சைக்கிளை ரூபாய் 350க்கு விற்பனை செய்தார். ஆனால், முத்து அந்த சைக்கிளை வாங்கிய விலை ரூபாய் 300 . அந்த வெளிநாட்டு பயணி, அவரிடம் பணம் இல்லை எனவும், ஆனால் அவரிடம் Travelers Cheque இருப்பதாகவும் கூறி, நூறு ரூபாய் மதிப்புள்ள நான்கு செக்குகளை முத்துவிடம் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு வங்கியில் கணக்கு இல்லை. அதனால் அவர் அந்த செக்குகளை அவருடைய பக்கத்து கடைக்காரரிடம் கொடுத்து, அவரிடம் இருந்து 400 ரூபாய் பணம் பெற்று, அதிலிருந்து 50 ரூபாயை அந்த பயணியிடம் கொடுத்து சைக்கிளையும் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு 50 ரூபாய் லாபம் வந்ததில் மகிழ்ச்சி.

    மறுநாள் முத்துவின் பக்கத்து கடைக்காரர், தான் வங்கியில் அந்த செக்குகளை டெபொசிட் செய்ததாகவும் ஆனால் அந்த செக்குகள் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறி, முத்துவிடம் அந்த செக்குகளை கொடுத்துவிட்டு அவர் கொடுத்த ரூபாய் 400ம் திரும்ப வாங்கிகொண்டு போய்விட்டார். முத்து எவ்வளவு தேடியும் அந்த பயணி கிடைக்கவில்லை. இந்த குளறுபடியால் முத்துவுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?


குறிப்பு:-

இந்த பதிவை யாரவது காப்பி பேஸ்ட் பண்ணினாலும் தயவு செய்து எனது இந்த பதிவிற்கு லிங்க் கொடுக்கவும் .

Wednesday, April 6, 2011

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?


செந்திலும் அகிலனும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அகிலன் : வணக்கம் செந்தில் எப்படி இருக்கீங்க?

செந்தில் : எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க.

அகிலன் : அப்படியா நல்லது. குழந்தைங்களுக்கு என்ன வயசு ஆகுது?

செந்தில் : அவங்க மூனுபேரோட வயச பெருக்கினால் 72 வரும். அவங்க மூனுபேரோட வயச கூட்டினால் உன் பிறந்ததேதி வரும்.

அகிலன் : அப்படியா, என்னால் இன்னும் கண்டுபிடிக்கமுடியல.

செந்தில் : என்னோட பெரிய குழந்தை இப்போதான் பியானோ கத்துக்க போறான்.

அகிலன் : அப்படியா. இப்ப எனக்கு அவங்க வயசு தெரிஞ்சிடுச்சி.


குழந்தைகளின் வயது என்ன? அகிலன் எப்படி கண்டுபிடித்தார்?


அதிகாரிகளுக்கு ஒரு "ஓ' போடுவோம்!

 தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் எவ்வித பரபரப்புமின்றி தேர்தல் களம் உள்ளது. இதற்கு எல்லாம் மூலகாரணம் தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை தான். அரசியல் கட்சிகளின் ஆரவார பிரசாரத்தை காணோம். ஒரு சுவரொட்டியையோ, சுவர் விளம்பரத்தையோ பார்க்க முடியவில்லை. தேர்தல் நடக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு போய்க் கொண்டு இருக்கிறது.வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும்போதும், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய வரும்போது மட்டும் அந்தந்த தொகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது. ஒலிப்பெருக்கி சத்தம் இல்லை. போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் கட்சிக்காரர்களின் வாகன அணிவகுப்பு எதையும் பார்க்க முடியவில்லை.இன்னும் சொல்லப்போனால், அரசியல்வாதிகளைவிட வாக்காளர்களுக்கு மதிப்பு கூடிவருவது போல் தெரிகிறது. இப்போது அரசியல் கட்சிகளின் கவலையெல்லாம், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுவார்களா, என்பது தான். இதனால், பணம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அதற்கும், தேர்தல் கமிஷன் "செக்' வைத்துவிட்டது. பண பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதை நடத்துவதற்கு ஐகோர்ட்டே அனுமதி வழங்கி உள்ளது.ஜனநாயகம் செத்துவிடவில்லை. இன்னும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிபட்டவர்களால், எந்த அரசியல்வாதிகளும், "சகாயம்' பெற்றுவிட முடியாது என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது. இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் கமிஷனும், நமக்காக பணியாற்றக்கூடிய அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட முடியும். அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிச் சென்றவர்களைக்கூட, திரும்பிப் பார்க்க வைத்துள்ள தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போடலாம்

இந்த பதிப்பை எழுதியவர் பெயரையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
மதுமிதா மணிவண்ணன், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து.

புதிர் 1 - விடை



இரண்டு இரும்பு கம்பிகளையும் படத்தில் இருப்பது போல வைத்து கோவிலை அடையலாம்.

மக்களுக்காக பாடுபட துடிக்கும் அன்பு உள்ளம்படைத்தவர்


நன்றி- ஆனந்த விகடன்.

Tuesday, April 5, 2011

வைகோவை காப்பாற்றுங்கள்!

என்னுடைய பருவ வயது காலம் முதல் பார்த்த கட்சிகளில் படித்தவர்கள்(சட்டம்) நிறைந்த கட்சி ம.தி.மு.க. ஒன்றே. இந்த ஒரு அபிப்ராயம் மட்டும்தான் இந்த கட்சி மீது எனக்கு உண்டு. ஒரு சாதாரண குடிமகனை போன்றே எனக்கும் வக்கீல்களை பிடிக்காது. DMK - ADMK கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகு, வைகோ மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட பெரிய தாக்கம் என்று சொல்லும் அளவுக்கு  எதுவும் இல்லை.

நேற்று நான் படித்த செய்தி : தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவலை என்று
 கூறுமளவுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.

இரவில் நான்கண்ட கனவு :  நானும் வைகோவும் கட்சி அலுவகத்தில் அமர்ந்து இருக்கிறோம். வைகோ சிறிது பதட்டமாகவே தோன்றினார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தார். ஒருமுடிவுக்கு வந்தவராக தொலைபேசியை எடுத்து காவல்துறைக்கு போன் செய்து "இன்னும்  சில மாதங்களுக்கு எங்கள் கட்சியில் எந்த கூட்டமும் நடக்காது ஆனாலும் எங்களுக்கு சிறிது காலம் நீங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை வரும், அதை உங்கள் கடமையாக நீங்கள் செய்தால் அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்" என்றார்.

அண்ணா,என்ன காரணத்திற்காக இப்படி கூறினீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா? என்றேன். "அந்த அம்மா கோபத்தில் நிதானமாக யோசிக்க தெரியாதவள், கள்ளத்தனமும் உண்டு,தான்தான் என்ற அகங்காரமும் உண்டு.ஆனால் குரோதம் படைத்த நெஞ்சம் கொண்டவள் அல்ல. ஆனால் இந்த மனிதன் எதையும் எப்படியும் எந்த வழியிலும்  அடைய வேண்டும் என்று நினைக்ககூடிய  மனம் படைத்தவன். சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் அல்ல, தான் செய்ததுதான் சரி என்னும் தர்க்கம் செய்யக்கூடியவன். இவர்கள் ஆட்டத்தில் நான் பகடையாக பலநேரங்களில் மாட்டிக்கொண்டேன், இந்த முறை அது நடக்காமல் செய்துவிட்டேன். இருந்தாலும் இவர்களிடம்  சிறிது எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்" என்றார். அதனால்தான் பாதுகாப்புக்காக நான் பட்டாக்கத்தியை என்பின்னால் ஒளித்துவைத்து இருந்தேன், இது அவர்க்கு தெரியாது. அவராக சுவர்பக்கமாக திரும்பி ஏதோ யோசித்து கொண்டும் சுவர்மீது உள்ள கரும்பலகையில் எழுதிக்கொண்டும் இருந்தார்.  நான் அறையின் இந்த மூலையில் வாசல்வாயில் அருகில் ஒரு செய்தித்தாளை படித்தும் பார்த்தும் கொண்டிருந்தேன்.

திடீரென்று படத்தில் வரும் வில்லன் போல மூன்று பேர் தடியாக முகத்தை மறைத்துக்கொண்டு நான் வைத்திருந்ததை விட இருமடங்கு பெரியதாக பட்டாக்கத்தியை என் முன்னே காட்டினார்கள் . நான் நா தழுத்து
எழுந்த பொழுது என் பின்னால் கத்தி கீழே சரிந்து விழுந்துவிட்டது. என்னால் அவர்களை சமாளிக்கமுடியாது அதனால் சமாளிப்பது முக்கியமல்ல சாமர்த்தியம் தான் முக்கியம் என்று எண்ணியவனாக அமைதி காத்தேன்.

அந்த நொடியில் ஒருவன் என் வாயைப்பொத்தி
வெளியில் தள்ளினான். தள்ளாடிக்கொண்டே  அண்ணே,உங்களை குத்த
 வருகிறார்கள் என்று கத்தி விட்டு ஓடினேன். ஓடிக்கொண்டே  ஜன்னல் 
வழியாக பார்த்தேன்,நான் கத்துவற்குள் அவர்கள் குத்திவிட்டார்கள், வேகமாக வெளியே  ஓடிவந்து அண்ணனை குத்திவிட்டார்கள் காப்பாற்றுங்கள் எனக்கத்தினேன், அவர்கள்என் அருகே வந்தார்கள்."இந்தா உன்னுடைய கத்தி எடுத்துகொண்டு ஓடிவிடு உன்னை விட்டு விடுகிறோம்,யாரிடமாவது சொன்னால் உன்கதி அவ்ளோதான் என்றார்கள்.

அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் விலகியதும் என் சித்திப்பையன் செய்திஆசிரியராக இருக்கிறான்.அவனுக்கு போன் செய்து "இந்தமாதிரி
நடந்து விட்டது உடனே வா" என்று அழைத்தேன். அவன் வரும்பொழுது
காவல்துறையும் வந்துவிட்டது.அவர்களிடம் நடந்ததை கூறிவிட்டு முழு
ஒத்துழைப்பும் அளிப்பதாக உறுதியளித்தேன். வைகோவை தீவிர
சிகிச்சைப்பிரிவில் சேர்த்தார்கள். 

இந்த நேரத்தில் கருணாநிதி " கூட்டணிக்கு ஆதரவு தராததால் ஒரு கோமகனை தமிழகத்தின் தன்னார்வ தொண்டனை, தள்ளி இருந்த போதும் என் தம்பியாகவே இருந்த தமயனை, தமிழகத்தின் போர்வாளை கொல்லத்துணிந்த, பதிவிரதம் தெரியாத, பத்தினியின் அர்த்தம் புரியாத, பெண்ணுருவம் கொண்ட ராஜபக்சேவுக்கா உங்கள் ஒட்டு, உங்கள் ஓட்டை ஓட்டையாக்கி விடாதீர்கள். நான் சிந்தும் இந்த கண்ணீற்கு விலையாக இல்லை என்றாலும் என் தம்பி சிந்திய ரத்தத்திற்காகவாது உங்கள் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்."

 அதே நேரத்தில் ஜெயலலிதா " வைகோ மீது நான் வைத்து இருக்கும் மரியாதை எல்லோருக்கும் தெரியும்.  அவரை குத்தி விட்டு பலியை
என்மீது போட்டு ஒட்டு சேகரிக்க பார்க்கிறார் கருநாக்கு படைத்த கருணாநிதி.
புலிகளை வைத்து என்ன கொள்ளப்பார்க்கிறான் என்று காரணம் காட்டி
கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு இன்று என் தம்பி என்று நாடகம் 
ஆடுகிறாயே வெட்கமாக இல்லையா உனக்கு. அன்று காங்கிரஸ் கட்சிக்காக 
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தாய். இன்று உன் கட்சி
மற்றும் உன் பதவி சுகத்துக்காக ஒருதமிழ் தலைவனை குத்திவிட்டாயே" என்றார்.  

இப்பொழுதும் வைகோவை பகடையாகவே  உபயோகப்படுத்துகிறார்கள்.
 பிறகு விடியற்காலை உதயத்தில் கனவு கலைந்து நான் விழித்துக்கொண்டேன். எதுவும் உண்மை இல்லை என்பதில் எனக்கு
சந்தோசமே, இவை நடக்காமல் இருக்கவும் நடக்க இருந்தால் தடுக்கவுமே
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

காவல்துறை நண்பர்களே உங்கள்மீது நம்பிக்கை வைத்த வைகோவை
பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது என் கனவு, மற்றவர்கள் கவனத்திற்காக.

Friday, April 1, 2011

புதிர்

ஒரு சதுர வடிவ குளம். அதன் நடுவில் ஒரு கோவில். குளத்தின் எந்த பக்கத்திலிருந்தும் அந்த கோவில் இருக்கும் தொலைவு 10 மீட்டர். (பார்க்க படம்.)



உங்களிடம் 9 மீட்டர் நீளமுள்ள இரண்டு இரும்பு பலகைகள் இருக்கின்றன. அதன் மேல் ஒருவர் நடந்து செல்ல முடியும். நீங்கள் குளத்தில் இறங்காமல் இந்த இரண்டு பலகைகளின் உதவியுடன் அந்த கோவிலை அடைய வேண்டும். எக்காரனத்தைக்கொண்டும் குளத்தினுள் இறங்கக்கூடாது. 


[Edit]
இந்த புதிருக்கான விடை இந்த பதிவில்.

Thursday, March 17, 2011

சாமர்த்தியசாலியான பெண் !

பத்து ஆண்களும் ஒரு பெண்ணுமாக பதினோரு பேர் ஒரு விமனாத்தில் கயிற்றின் உதவியோடு வானில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அந்த கயிற்றின் வலிமை பத்து பேருக்கு 
மேல் தாங்காது, எனவே ஒருவர் கையிற்றை விட்டு விலக வேண்டும் . 
யார் விலகுவது என்று அவர்களுக்குள் போட்டிவலுத்தது. 
இதைப்பார்த்த அந்த பெண் பெருந்தன்மையாக எல்லோருக்கும் கேட்கும்படி
"இந்த உலகத்தில் பெண்களான நாங்கள் கணவருக்கும் எங்கள்
குழந்தைகளுக்குமாக மொத்தத்தில் ஆண்களுக்காக எங்கள் வாழ்க்கையை கொடுக்கிறோம் அதுபோல இன்று ஆண்களாகிய
உங்களுக்கு விட்டு கொடுப்பதில் நான் பெண் என்பதில் பெருமைபடுகிறேன் " என்றதுதான் தாமதம் மொத்த ஆண்களும் வியந்து தன்னிலையை மறந்து  ஆஹா! ஆஹா! என்று கைத்தட்டி ஆனந்தத்தோடு  பார்த்தார்கள்  பாருங்கள்!
அந்த பெண் அதே இடத்தில் தான் இருக்கிறாள் கயிற்றோடு!
 பிறகென்ன நடந்திருக்கும்!, ஆமாம் நீங்கள் நினைத்தது சரிதான்.

Monday, February 21, 2011

இந்து மதம், "திருமணம்'

*இந்து மதம், திருமணத்தை, "சமஸ்காரம்' என, அழைக்கப்படும் மதக் கோட்பாடுகளில் ஒன்று என்கிறது.

*திருமணத்தின் உள்நோக்கம், உடலின்பத்தை அனுபவிப்பதும், குழந்தை பெறுவது மட்டுமல்ல.
ஒரு மனிதன், தன் பாவக் கறைகளை நீக்கி, அறநெறிகளின் படி வாழ, மதம் காட்டும் ஒரு பாதையே, திருமண வாழ்வு.

*இந்தியாவில், முன்பு எட்டு வகை திருமணங் கள் இருந்தன. பிரும்ம மணம் (மாப்பிள்ளை வீட்டாரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராது, பெண்ணைக் கொடுத்தல்), அசுர மணம் (மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண் வீட்டார் பிரதிபலன் எதிர்பார்ப்பது), தெய்வ மணம், அர்ஷ மணம், பிரஜாபத்ய மணம், காந்தர்வ மணம், ராட்சச மணம், பைசாக மணம். பிரும்ம மணமும், அசுர மணமும் மட்டுமே வழக்கில் உள்ளன.

* சபிண்ட உறவு உள்ளோர், மணந்து கொள்ளக் கூடாது. தாய் வழியில் மூன்று தலைமுறைக்குள்ளும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்குள்ளும், வராத உறவுமுறையைக் கொண்ட ஒருத்தியை, ஒருவன் மணக்கலாம். சபிண்டம் என்றால், ஒரே பிண்டத்தை சேர்ந்தவர்கள் என பொருள். அக்கருத்தையே மிதாட்சரம் என்ற நூலும், தாயபாகம் என்ற நூலும் ஏறக்குறைய வலியுறுத்துகின்றன.

* இந்து திருமண சட்டப்படி, ஒரு ஆண் மணக்கக் கூடாத பெண்கள் யார் யார் தெரியுமா?

ஏறுவழி உறவு முறைப்பெண், ஏறுவழி உறவுக் கரரின் மனைவி அல்லது இறங்குவழி உறவினரின் மனைவி, சகோதரனின் மனைவி, தந்தையின் சகோதரரின் மனைவி, தாயின் சகோதரியின் மகள் (சில வகுப்பில் விலக்கு உண்டு) தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி மகள் (விலக்கு உண்டு), தந்தையின் சகோதரர் மகள், (விலக்கு உண்டு.) தவிர, இந்து திருமணம் சட்டம், ஒரு ஆணும், பெண்ணும் மணந்து கொள்ள, பல நிபந்தனைகளை விதிக்கிறது.

* திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடை பெறும் சமயத்தில், வேறொரு கணவனோ, மனைவியோ உயிருடன் இருக்கக் கூடாது. மணமக்கள் மனநிலை பிறழ்ந்தவராக இருத்தல் கூடாது.

 மணமகனுக்கு திருமண வயது 21, மணமகளுக்கு 18. மணமக்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட உறவு முறையோ, சபிண்ட உறவுமுறையோ இருத்தல் கூடாது.

இன்னும் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

Tuesday, February 15, 2011

சிவனடியார்களின் நெற்றிக்கண்

சுவாமிகளே தாங்கள் காண்பது சாட்சாத்
அந்த பரமேஸ்வரனின் நாட்டியத்தையா?
இல்லை பங்கு சந்தை நிலவரத்தையா?  

Wednesday, January 12, 2011

வெள்ளந்தி விவசாயி கொடுத்த சாட்டையடி...

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த டிசம்பர்  23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்.
 மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Tuesday, January 11, 2011

எல்லோரும் அறிந்துகொள்ளலாமே!


அன்பானவர்களே,
நான் அறிந்ததை உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.... 

  • தமிழ்நாட்டில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் "RED SOCIETY"  9940217816. அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவியை செய்வார்கள்.





 

  • கீழ்க்கண்ட வலைப்பின்னல் பார்க்க  :     www.friendstosupport.org

     இதன் மூலமாக உங்கள் அருகாமையில் உள்ள  இரத்த நன்கொடையாளர்(Donor), இரத்த வகை(BLOOD GROUP) , முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை நீங்கள் தெரிந்துகொள்ள மற்றும் தொடர்புக்கொள்ள முடியும். இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்.


  • பொறியியல் மாணவர்கள்  இந்த வலைப்பின்னலில் பதிவு செய்து(register) கல்லூரிக்கு வெளியில் நேர்முகத்தேர்வில்(Off Campus) கலந்துக்கொள்ளுங்கள். http://www.campuscouncil.com/ .



  • மாற்றுதிரனாளிகளுக்கு இலவச கல்வி மற்றும் இலவச தங்கும் வசதி பற்றித்தேரிந்துக்கொள்ள! தொடர்புக்கு :- 9842062501 & 9894067506
  • தீ விபத்தால் அல்லது பிறவியிலே காது,மூக்கு வாய் பிரச்னைக்கு இலவச பிளாஸ்டிக் சிகிச்சை (PLASTIC SURGERY) கொடைக்கானலில் உள்ள பாசம்(PASAM Hospital) மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.23 மார்ச் முதல் 4 ஏப்ரல் வரை ஜேர்மன் மருத்துவர்  (by German Doctors) . Contact : 045420-240668,245732. "இறைவனை வேண்டும் உதடுகளைவிட, உதவும் கரங்களே உயர்ந்தது".   
  •  முக்கிய ஆவணங்களான பாஸ்போர்ட்(Passport),ஓட்டுனர் உரிமம்(Driving license), குடும்ப அட்டை (Ration card),வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass  Book) போன்றவற்றை  நீங்கள் கண்டெடுத்தால் அருகில் உள்ள தபால்பெட்டியில் போடுங்கள். தபால்துறை உரியவர் முகவரிக்கு அனுப்பி அதற்கான கட்டணத்தையும் பெறும்.  
  • அடுத்த 10 மாதங்களில் பூமி 4 டிகிரி அதிக வெப்பமடையும்.இமயமலை கரைந்துகொண்டே வருகிறது. அதனால் உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் கைகோர்த்து செயல்படவேண்டும். 
    • -மரம் நடுங்கள்.
    • -மின்சாரம் மற்றும் தண்ணீரை வீணாக்காதீர்கள்.
    • -பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தவோ எரிக்கவோ கூடாது. 
  •  பூமியில் உள்ள மனித உயிர்களின் ஆறு மாத பிராண வாயுவுக்கான செலவு 38 ட்ரில்லியன் டாலர் ஆகும்.. "மரங்கள் இலவசமாக தருகிறது "  அவற்றை நாம் பாதுகாக்கவேண்டும்.
  • கண் வங்கி மற்றும் கண் தானத்திற்கு தொடர்புக்கொள்ள  தொலைபேசி எண் 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye  Bank)  இன்னும் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வலைப்பின்னலையும் அணுகலாம்:. . http://www.kannoli.com/eyebank.html  http://ruraleye.org/ 
  •  0-10 வயது குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு(Heart Surgery free of cost) ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்ட்யூட் பெங்களுரு. (Sri Valli Baba Institute Banglore. ) தொடர்பு : 9916737471 
  •  உங்கள் வீட்டு விசேசத்தில் மீதியான உணவை குப்பையில் கொட்டாமல் இவர்களுக்கு கொடுத்து உதவலாமே. தொடர்புக்கு: 1098 (only in  India ).
இந்தியாவை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற உதவுங்கள்.
  


Tuesday, January 4, 2011

இந்த ஊரில் நானும் ஒரு மைந்தன்

நான் விளையாடும்பொழுது வந்த வியர்வையையும்
நான் விழுந்தெழும்பொழுது வந்த குருதியையும்
என் அன்னை என்னை ஈன்றபொழுது வந்த உதிரத்தையும்
பார்த்த பரிவு காட்டிய  பாசம் நிறைந்த ஊர்.
என் பரம்பரை வாழ்ந்த ஊர் என்ற பாரம்பரியத்தை
எனக்கு உருவாக்கி கொடுத்த ஊர்.
மலைகள் சூழ்ந்த ஊர் ஆனாலும்
வறண்ட காலத்தில் தானும் வறண்டு போகும் குளங்கள் கொண்ட ஊர்.
ஜாதிகள் பல உள்ளடக்கிய ஊர்.
அவரவர் அடையாளங்கள் அழியாத ஊர்.




Monday, January 3, 2011

என் கிறுக்கலும் கவிதை என்றாகுமோ?

நானும் அலைந்து, திரிந்து,
மனதில் தோன்றிய வார்த்தைகளை
நடை மாற்றி தடம் மாற்றி கோர்த்தேன்....
யாரால் எப்பொழுது பாராட்ட படுமோ
நானறியேன்....
ஆனால் அப்பொழுது என் கிறுக்கலும்
கவிதை என்றாகுமோ....